பத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா? மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

பத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா? மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

பத்தரிகைகள் வினியோகம், பால், பால் சார்ந்த பொருட்கள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் இந்த பொருட்களுக்கு கெடுபிடி காட்டக்கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்பதும், இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில், ஒருசில மாநிலங்களில் பத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடி காட்டுவதாக எழுந்த புகார்களை அடுத்து சற்றுமுன் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் ’ஊரடங்கு அமலாகி உள்ள நிலையிலும் பத்திரிகைகள் அச்சிடுவதற்கும் விநியோகம் செய்வதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே பத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் மாநில போலீசார் பத்திரிகைகளை விநியோகம் செய்ய கெடுபிடி காட்டக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply