நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றைத் தலை வலி போன்றவை குணமாக . . .
தலைவலி, நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றை த் தலைவலி போன்ற தலைவலி பிரச்சனைகளில் இருந்து குணமடைய எளியதொரு தீர்வு நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அது எளிமையானதும் நீங்களே வீட்டில் தயார் செய்தும் பயன்படுத்தினால், மேற்படி தலைவலிகள் முற்றிலும் குணமைந்து சுகம் காண்பீர்கள். இதோ அந்த எளிய தீர்வுதரும் மா மருந்து
அதிமதுரம், ஏலக்காய், சித்தரத்தை, சீரகம், சுக்கு, சோம்பு, தனியா, மகிழம்பூ, ரோஜாப்பூ, போன்ற ஒவ்வொன்றிலும் தலா 25 கிராம் அளவு சேர்த்து தூள் செய்த கலலை மருந்தினை காலை- மாலை இருவேளையும் அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மேற்படி தலைவலிகள் முற்றிலும் குணமடைவீர் என்பது திண்ணம்.