ஓடியாடி வேலை செய்வோரை விட, ஒரே இடத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே வேலை செய்வோரின் எண்ணிக்கை தான் அதிகம். அதுமட்டுமின்றி, வீடு ஒரு மூலையில் இருக்க, அலுவலகம் இன்னொரு மூலையில் இருக்க, பலரும் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் செல்ல நீண்ட நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப்படி ஒருபுறம் இவ்வளவு பிரச்சனைகள் இருக்க, மறுபுறம் அதிக வேலையின் காரணமாக தண்ணீர் குடிக்க கூட நேரம் இல்லாமல் போகிறது. இதனால் உடல் மட்டுமின்றி, கண்களும் வறட்சி அடைவதோடு, சோர்ந்து, அரிப்புகள் மற்றும் எரிச்சல்களை ஏற்படுத்துகிறது.
மேலும் தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், கண்களில் ஏதாவது தூசி விழுந்து, கண்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பிரச்சனைகளை மீறி எப்படி கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு ஒரு வழி உண்டு. அது தினமும் வீட்டிற்கு சென்றதும் இரவில் படுக்கும் முன் கண்களுக்கு ஒருசில இயற்கை சிகிச்சைகளை மேற்கொண்டால், கண்களை ஆரோக்கியமாக பிரச்சனையின்றி புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். அது என்ன சிகிச்சை என்று பார்ப்போமா!!!
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்து, கண்களை மூடிக் கொண்டு, கண்களின் மேல் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கண்களில் உள்ள சோர்வு மட்டுமின்றி, அரிப்பு மற்றும் எரிச்சலையும் போக்கலாம்.
விளக்கெண்ணெய்
கண்களில் சில துளிகள் சுத்தமான விளக்கெண்ணெயை ஊற்றினால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையால், கண்களில் ஏற்படும் அரிப்புகள், வீக்கம், எரிச்சல் போன்றவை குணமாகும். மேலும் விளக்கெண்ணெயை கண்களில் ஊற்றினால், கண்கள் பளிசென்று தெரியும்.
வெள்ளரிக்காய்
அனைவருக்குமே வெள்ளரிக்காயை கண்களுக்கு பயன்படுத்தினால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்று தெரியும். ஆனால் வெள்ளரிக்காய் கண்களில் ஏற்பட்டும் அரிப்பையும், எரிச்சலையும் தணிக்கும் என்பது தெரியுமா..?
டீ பேக்
டீ பேக்கில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் பயோ-ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானிக் ஆசிட் நிறைந்துள்ளது. எனவே டீ பேக்கை நீரில் ஊற வைத்து, பின் அதனை ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து, பின் அதை கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன், பிரச்சனைகள் நீங்கி காணப்படும். Show Thumbnail
காய்கறிகள்
வீட்டில் உள்ள காய்கறிகளை அரைத்து அதனை காட்டன் மேல் வைத்து, பின் அந்த காட்டனை கண்களுக்கு மேல் வைத்தால், கண்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு, எரிச்சல் மற்றும் சோர்வு நீங்கும்.
குளிர்ந்த ஸ்பூன்
ஸ்பூனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அதனை கண்களின் மேல் குளிர்ச்சி போகும் வரை வைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பார்வை தெளிவாகும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை காட்டனில் நனைத்து கண்களில் மேல் வைத்தார், கண்களில் உள்ள புண் மற்றும் அரிப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியோடும் தெளிவாகவும் காணப்படும்.
ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகள் அல்லது ஐஸ் தண்ணீரை கண்களின் மேல் வைத்து வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்
தண்ணீர் குடிக்கவும்
முக்கியமாக எவ்வளவு வேலை இருந்தாலும், தண்ணீர் குடிப்பதை மட்டும் மறக்கவே கூடாது. வேலை செய்யும் போது 10 நிமிடம் ஒருமுறை சிறிது தண்ணீர் குடித்து வர வேண்டும். இதனால் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.