உலகின் மிக விலையுயர்ந்த வைரத்தை விலைக்கு வாங்கிய ஹாங்கான் கோடீஸ்வரர்
ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஹெண்ட்ரி செங் கார்-ஷான் என்ற கோடீஸ்வரர் கடந்த ஆண்டு மறைந்த தனது தந்தையின் நினைவாக மிக விலையுயர்ந்த வைரத்தை விலைக்கு வாங்கியுள்ளார். 70 வயதான இவர் நேற்று நடந்த ஏலம் ஒன்றில் கலந்து கொண்டு இந்த வைரத்தை கைப்பற்றினார்.
59.60 காரட் மதிப்புள்ள இந்த வைரம் ‘பிங்க் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரத்தை இவர் $71.2 மில்லியன் தொகைக்கு ஏலம் எடுத்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.463 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரத்தை ஏலம் எடுக்க மூன்று கோடீஸ்வரர்கள் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில் ஹெண்ட்ரி செங் கார்-ஷான் ஏலத்தில் வெற்றி பெற்றார். இந்த வைரம் கடந்த 1999ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரச்சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.