பிரேசில் நாட்டில் உள்ள 10 வயது சிறுமியின் எளிறுகளின் உள்ளே சுமார் 15 புழுக்கள் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அந்த புழுக்களை உயிருடன் வெளியே எடுத்தனர். இதுகுறித்த அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசில்லா பகுதியில் வாழ்ந்த 10 வயது சிறுமி ஆனா கார்டோஸ் என்ற சிறுமியின் எளிறுகளில் கடுமையான வலி ஏற்பட்டதால் அவருடைய பெற்றோர்கள் அங்கிருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், அவருடைய எளிறுகளின் உள்ளே உயிருடன் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மருத்துவர்களின் குழு ஒன்று தீவிர முயற்சிக்கு பின்னர் அந்த சிறுமியின் எளிறுகளில் உள்ளே இருந்த புழுக்களை வெளியே எடுத்தனர். சிறுமி ஆனா அடிக்கடி தனது வாயில் புழுக்கள் வருவதாக தாயாரிடம் சொல்லியிருந்ததாகவும், ஆனால் மகள் ஆனா தன்னிடம் பொய் சொல்வதாக அவர் தாயார் நினைத்து கவனிக்காமல் விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சிறுமி பல புழுக்களை விழுங்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவரது உடல் முழுவதையும் பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.