சிகிச்சைக்கு வந்த 200 நோயாளிகளை கொலை செய்த ஆஸ்திரேலிய மருத்துவமனை. அதிர்ச்சி தகவல்

australia hospitalஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்று தங்களிடம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 200 பேர் இறந்துவிட்டதாக தவறாக அவர்களுடைய உறவினர்களுக்கு செய்தி அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஆஸ்டின் என்ற மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நோயாளிகள் சிகிச்சை குறித்து அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பும் பேக்ஸ் ரிப்போர்ட்டில் நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறாக அறிவிப்பு செய்துவிட்டார். அவர் கம்ப்யூட்டரில் மவுசை தவறாக க்ளிக் செய்ததால் இந்த தவறு நேர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தவறு ஒருசில நிமிடங்களில் சரிசெய்யப்பட்டுவிட்டாலும், நோயாளிகளின் உறவினர்கள் இந்த ஃபேக்ஸை பார்த்து அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை வாசலில் குவிந்தனர். நோயாளிகளின் உறவினர்களிடம் வருத்தம் தெரிவித்த ஆஸ்டின் மருத்துவ நிர்வாகம், இதுகுறித்து விசாரணை செய்து சம்மந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளது.

Leave a Reply