கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை அறிக்கை

கமலஹாசனுக்கு இன்று கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவருக்கு சுவாச குறைவு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.