கமல்ஹாசன் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை அறிக்கை
உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அந்த மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசன் நேற்று இரவு காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
இதனை அடுத்து கமல்ஹாசன் நாளை அல்லது நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.