ஆங்கிலத்தில் ஒரு காரசாரமான மோதல். முதல்வரின் அதிரடி பதிலால் திமுக எம்.எ.ஏ அதிர்ச்சி

ஆங்கிலத்தில் ஒரு காரசாரமான மோதல். முதல்வரின் அதிரடி பதிலால் திமுக எம்.எ.ஏ அதிர்ச்சி

TRBaluson-jayalongதமிழக சட்டமன்றத்தில் நேற்று தொழில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் இடையில் முதல்வர் ஜெயலலிதாவும், திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவும் ஆங்கிலத்தில் காரசாரமாக மோதிக்கொண்டனர். இறுதியில் முதல்வர் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா திணறினார்.

இந்த விவாதத்தின் முழு பகுதியை இப்போது பார்ப்போம்:

ராஜா: Hon’ble Speaker Sir, I am absolutely sure that Chief Minister should have understood that I am trying to say is that I was actually trying to put forth the policy for your approval Madam. But, I believe, both the Ministers got my point and they have been talking about Minimum Support Price and having not…..

ஜெயலலிதா: My dear young MLA, I have fully understood what you were trying to say. I only responded to the point you made about industries having fled the State and having gone to Karnataka and Andhra Pradesh, which is not true.

ராஜா: I beg to differ again. Honble Madam, I was actually saying ‘என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.’ That would actually mean, these are the doubts that prevail in the market. But, I believe you didn’t get it probably. So I have just clarified that point. So, you have clarified that the…

ஜெயலலிதா: Hon’ble Speaker Sir, my dear young man, I fully got what you were trying to convey. You are trying to play with words. That won’t work with me. You said very clearly that industries that should have come to Tamil Nadu, went to Karnataka and Andhra Pradesh, which I repeat, is not true.

ராஜா: OK Madam, if that’s what you have got, it is OK. VAT refund. I will be doling out numbers soon and then you can keep going on about it……

ஜெயலலிதா: Hon’ble Speaker Sir, In the mean time, I have some numbers to dole out.

இதைத் தொடர்ந்து தமிழில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டிலிருந்து வேறு எங்கும் செல்லாத தொழிற்சாலைகள் பற்றி, ‘சென்றதாக சொல்லப்படுகிறதே’ என்று கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை, ஏன் இங்கு நடத்தப்படாமல், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டது, ஏன் அங்கு துவங்கப்பட்டது என்று விளக்கம் கூற தயாரா என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பதில் சொல்லத் தெரியாத விஷயங்களுக்கெல்லாம், ‘நான் அதற்குள் போக விரும்பவில்லை’ என்று சொல்கிறார். இந்தப் பிரச்னையை ஆரம்பித்ததே உறுப்பினர்தான். இங்கிருந்து செல்லாத தொழிற்சாலைகள் ஆந்திராவிற்கும்,
கர்நாடகத்திற்கும் சென்றதாக, ‘பேசப்படுகிறது, கூறப்படுகிறது’ என்றார். உண்மையாகவே இங்கிருந்து ஆந்திராவிற்கு சென்ற, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்ற, ஒரு தொழிற்சாலை ஏன் சென்றது? மெட்ரோ ரயில் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்காக பெட்டிகளை தயாரிக்கப்பட வேண்டிய தொழிற்சாலை இங்கே துவங்கப்படாமல், அது ஏன் ஆந்திராவிற்கு சென்றது? ஏன் அங்கே துவங்கப்பட்டது என்று உறுப்பினர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை’ என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது.

மெட்ரோ ரயில் திட்டமே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டு நடத்துகின்ற ஒரு திட்டம். இதற்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டது அதிமுக அரசுதான். அப்பொழுது அதற்கான- மெட்ரோ ரயிலுக்கான coach பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கே தொடங்குவதாகத்தான் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கே துவங்கப்படாமல், அது ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. ஆகவே, இங்கே ஏன் துவங்கப்படவில்லை என்று கேட்டதற்கு, இது மத்திய அரசின் திட்டம் என்றால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் அல்ல. மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து நடத்துகின்ற ஒரு திட்டம்தான் இது. கேட்கப்பட்ட கேள்வி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏன் ஆந்திராவுக்கு சென்றது? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏன் சென்றது? என்றுதான் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லாமல், உறுப்பினர் வேறு புள்ளிவிவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர் பேசுகின்றபோது, தொழிற்சாலைகள் ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் சென்று கொண்டிருக்கின்றன என்ற ஒரு தவறான கருத்தைச் சொன்னார். அதற்குப் பதில் சொல்ல நான் சில கருத்துகளை இங்கே தெரிவித்தேன். அதன் பிறகு, இப்பொழுது அவர் சொல்லுகிறார், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏன் ஆந்திராவிற்குச் சென்றது என்று நான் கேட்டபோது, அதற்குப் பதில் சொல்ல முடியாமல் வேறு ஏதேதோ பேசி, இப்பொழுது மெட்ரோ ரயில் திட்டத்தையே எதிர்த்த முதலமைச்சர் இப்போது பெட்டிகள் ஏன் ஆந்திராவிற்குச் சென்றன என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டு, அவருடைய lack of maturity அதாவது முதிர்ச்சியின்மையைத்தான் அவர் காட்டுகிறார் என்று சொல்ல வேண்டும்.

அதாவது, Point No. 1, கேள்வி, இவர் எழுப்பிய கேள்வி. இங்கே வரவேண்டிய தொழிற்சாலைகள் ஏன் ஆந்திராவிற்கும், கர்நாடகத்திற்கும் சென்றன என்று கேட்டார். அதற்கு நான் சுட்டிக்காட்டினேன், இங்கே வரவேண்டிய ஒரு தொழிற்சாலை ஆந்திராவிற்கு சென்றுவிட்டதே, தி.மு.க. ஆட்சியிலே சென்றுவிட்டதே? ஏன் சென்றுவிட்டது? என்று கேட்டேன். ஆனால், மேலும் அவர் ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதால், இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. இப்போது தொழில் துறை அமைச்சர் தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தி.மு.க. அரசுக்கும், அதாவது தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்காகப் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், எப்படி தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருக்கிறது, எப்படி தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை விவரமாகச் சொன்னார். அவர் பல விவரங்களைச் சொன்னார். அதை எளிதாகப் பாமர மக்களுக்குப் புரியும் விதத்தில் நான் இங்கே விளக்கம் கூற விரும்புகிறேன். அவர் சொன்ன பல கருத்துகளின் மையக் கருத்து, சாராம்சம், என்னவென்றால் முக்கியமாக அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இலாபத்தில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. மாநில அரசுக்கும் பங்கு உண்டு. ஆனால் நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டம் முழுவதையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அந்த விவரம் உறுப்பினருக்குத் தெரியுமா? தெரியாதா?

மேலும் இந்தத் திட்டமே JICA என்ற ஜப்பான் நிறுவனத்திடமிருந்து, அமைப்பிலிருந்து பெறப்பட்ட கடனுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் JICA கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால், அதில் மத்திய அரசுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. தமிழக அரசுதான், மாநில அரசுதான் திருப்பிச் செலுத்தவேண்டும் என்று அதில் சரத்து இருக்கிறது. இப்படிப்பட்ட, தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற, தமிழகத்திற்கு துரோகம் செய்கின்ற சரத்துகளெல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன. அதைத்தான் இப்போது அண்மையில்கூட நான் பிரதமருக்கு கடிதம் எழுதியபோதுகூட நான் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும், தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கின்ற சரத்துகளையெல்லாம் மாற்றியமைக்கவேண்டுமென்று கேட்டிருக்கிறேன். இதைப் பற்றியெல்லாம் உறுப்பினருக்குத் தெரியுமா? தெரிந்தால், பதில் சொல்ல முடியுமா? இப்படி தமிழ்நாட்டை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏன் வஞ்சித்தீர்கள்? இப்படிப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திட்டீர்கள்? அவருக்கு maturity போதவில்லை என்பதை நான் மட்டும் சொல்லவில்லை, அவரே அதை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்”

இவ்வாறு முதல்வர் அதிரடியாக சட்டமன்றத்தில் பேசினார்.

Leave a Reply