பலூனில் பறந்தபடியே திருமணம் செய்த 16 ஜோடிகள்

பலூனில் பறந்தபடியே திருமணம் செய்த 16 ஜோடிகள்

திருமணத்தை எப்படி எப்படியெல்லாம் வித்தியாசமாக செய்யலாம் என்று பலர் பலவிதமாக யோசித்து வருகின்றனர். கடலுக்கு அடியில், உலகிலேயே உயரமான இடத்தில், நடுக்கடலில் என எத்தனையோ திருமணங்கள் வித்தியாசமான முறையில் நடந்துள்ளது. அந்த வகையில் தற்போது 16 ஜோடிகள் பலூனில் பறந்தபடியே அந்தரத்தில் திருமணம் செய்து கொண்டனர்

தென் சீனாவில் வசந்த காலம் தொடங்கியதை அடுத்து அந்த நாட்டில்  பெரும்பாலான இடங்களில் மஞ்சள் நிற பூக்கள் பூத்து குலுங்கி சொர்க்கம் போல் காணப்படுகிறது. இந்த பகுதியில் இயற்கையான சூழலில் 16 இளம் ஜோடிகள் அந்தரத்தில் பலூனில் தொங்கிக்கொண்டே திருமணம் செய்துகொண்டதோடு, அவர்கள் செல்பி எடுத்து கொண்டு அசத்தினர்.

இளம்ஜோடிகள் பறந்து கொண்டே திருமணம் செய்துகொண்ட மணமக்களை பார்க்கும் போது, திருமணத்திற்கு காத்திருக்கும் ஜோடிகள், நாமும் இதுபோன்ற இயற்கை எழில் பொங்கும் இடத்தில் தான் திருமணம் செய்யவேண்டும் என நினைக்கத் தோன்றும் அளவுக்கு உள்ளது.

Leave a Reply