வெங்காயம் தராத ஓட்டல் உரிமையாளர் சுட்டு கொலை. பீகாரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

வெங்காயம் தராத ஓட்டல் உரிமையாளர் சுட்டு கொலை. பீகாரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

onion_004தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் அதிரடியாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஏழை எளிய மக்களின் அன்றாட தேவையான வெங்காயத்தின் விலை விண்ணை தொடும் அளவிற்கு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஓட்டலில் வெங்காயம் தராததால் ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்துள்ளது.

வட இந்திய மக்கள் வெங்காயம் இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட மாட்டார்கள். அந்த அளவுக்கு வெங்காயம் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்ளது. இந்நிலையில் பாட்னா ஓட்டலில் இரவு உணவு அருந்தியவர்கள் அதற்கு தொட்டுக் கொள்ள வேண்டி கேட்ட வெங்காயத்தை தரமறுத்த அதன் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பீகார் மாநிலத்தில் பாட்னா அருகே பேகுசராய் மாவட்டத்தின் பரோனி ரயில் நிலையம் முன்பாக இருக்கும் லலித் நாரயண் மார்கெட்டில் ஒரு சிறிய ஓட்டல் நடத்தி வருபவர் ரித்திஷ்குமார் பண்டிட் (29). இவரது ஓட்டலுக்கு நேற்று இரவு குணால் குமார், விஜய் குமார், சோட்டே லால் மற்றும் தனராஜ் ஆகிய நான்கு இளைஞர்கள் உணவருந்த வந்திருந்தனர்.

இவர்களுக்கு அங்கு பறிமாறப்பட்ட உணவுடன் வெறும் எலுமிச்சை மற்றும் மிளகாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. வெங்காயம் தரப்படாதது குறித்து உரிமையாளர். ரித்தீஷிடம் சென்று நால்வரும் தட்டிக் கேட்டுள்ளனர்.

இதற்கு, வெங்காயம் விற்கும் விலையில் அதை உணவுடன் தொட்டுக் கொள்ள தரமுடியாது என மறுத்துள்ளார் ரித்திஷ். இதை ஏற்காத நால்வரில் ஒருவர் தன்னிடம் இருந்த கள்ள கைத்துப்பாக்கியால் ரித்திஷை சுட்டிருக்கிறார். மற்ற மூவரும் ரித்தீஷ் தப்பி விடாதபடி மறித்து பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நெற்றிப் பொட்டில் குண்டு பட்டு ரித்திஷின் உயிர் அதே இடத்தில் பிரிய, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

தப்பி ஓடிய நால்வரையும் பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

Leave a Reply