ஐதராபாத் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கொரோனா எப்படி வந்தது? அதிர்ச்சி தகவல்

ஐதராபாத் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கொரோனா எப்படி வந்தது? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்தியாவிற்கும் கொரோனா வைரஸ் புகுந்து விட்டது என்றும் ஏற்கனவே மூன்று இந்தியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவை சேர்ந்த ஹைதராபாத் சாப்ட்வேர் இன்ஜினியர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் துபாய்க்கு சென்றதாகவும் அங்கு அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஹாங்காங்கை சேர்ந்த ஒருசில பிரதிநிதிகளை அவர் சந்தித்ததாகவும், அவர்களிடமிருந்து தான் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாகவும் கூறப்படுகிறது

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அவர் துபாயில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய நிலையில் பிப்ரவரி 23ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply