சீனா மாதிரி இந்திய அரசும் அராஜகம் செய்ய வேண்டுமா? நெட்டிசன்கள் கருத்து
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் பூட்டி, பூட்டை வெல்டிங் செய்து வைத்து அராஜகம் செய்தார்கள். எனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் வெளியே வர வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அவ்வாறு செய்தால் மனித உரிமை கமிஷன்கள் பொங்கி எழுந்து விடுவார்கள். அதே நேரத்தில் இந்திய மக்கள் சுயகட்டுப்பாடின்றி, பொறுப்பின்றி கொரோனா குறித்த சீரியஸ் இல்லாமல் சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து வருகின்றார்கள்
அரசியல் கட்சிகள் ஒரு நாள் பந்த் நடத்தினால் மறுநாள் மக்கள் எப்படி சர்வசாதாரணமாக நடமாடுவார்களோ, அதேபோல் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் நேற்று சர்வசாதாரணமாக பொதுமக்கள் நடக்கத் தொடங்கிவிட்டனர்
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அபாயம் குறித்து இன்னும் மக்கள் மனதில் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது என்றும், சீன அரசு போல் மனிதத்தன்மையை பார்க்காமல் அராஜமாக இந்திய அரசு செயல்பட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை என்பதுதான் தற்போதைய இந்தியாவின் நிலை ஆகும்