இந்தப் படம் எப்படி?

mass_2407369f

திரைப்பட ரசிகர்களுக்கு ஐ.எம்.டி.பி. தளம் நன்கு பரிச்சயமானதுதான். ஐ.எம்.டி.பி.யில் எந்தத் திரைப்படம் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என்பதோடு அந்தப் படத்துக்கான ரசிகர்கள் ரேட்டிங்கையும் பார்க்கலாம்.

ஆனால், இந்த ரேட்டிங்கைப் படம் பார்ப்பதற்கான பரிந்துரையாக எடுத்துக்கொண்டால் ரிஸ்க்தான். ஏனெனில், சுமார் படங்களைக்கூட ரேட்டிங் சூப்பர் எனக் காட்டும்.

இதற்குத் தீர்வாக திரைப்படத்தின் தரத்தை எடைபோட்டுச் சொல்லும் இணையதளம் இருக்கிறது.

http://pretentious-o-meter.co.uk/. இந்தத் தளத்தில் படத்தின் பெயரைக் குறிப்பிட்டால், அந்தப் படத்தின் ஐ.எம்.டி.பி. ரேட்டிங்குடன், விமர்சகர்களின் கருத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, மதிப்பீட்டை வழங்குகிறது.

0 முதல் 100 வரை மார்க் தருகிறது. சிவப்பு நிறத்தில் மதிப்பெண் இருந்தால் படம் குப்பை. பச்சை என்றால் சூப்பர் படம்.

ஐ.எம்.டி.பி. மட்டும் அல்லாமல், திரைப்பட விமர்சன தளமான ராட்டன் டொமேட்டோஸ் தளத்தின் ரேட்டிங்குடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நியால் பியார்ட் (Niall Beard) என்பவரின் படைப்பு இந்தத் தளம்.

Leave a Reply