2011-ல் ரூ.51.40 கோடி, 2015-ல் ரூ.117 கோடி. 4 ஆண்டுகளில் ஜெ.சொத்து இரு மடங்கு ஆனது எப்படி?

jayaகடந்த 2011ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டபோது ரூ.51.40 கோடி சொந்த்து இருந்ததாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நான்கே ஆண்டுகளில் அவருடைய சொத்து மதிப்பு இருமடங்கிற்கும் அதிகமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆர்.கே.நகரில் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜெயலலிதா தனக்கு ரூ.117கோடி சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அதிகாரி முன்னிலையில் தனது வேட்பு மனுவை, சென்னை மாநகராட்சி மண்டலம் IV அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சவுரிராஜனிடம் தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் இணைத்திருந்த சொத்துமதிப்பு பட்டியலில் தனக்கு ரூ.117 கோடி சொத்துகள் இருப்பதாகவும், அதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.45.04 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.72.09 கோடி என்றும் தெரிவித்து உள்ளார்.

நான்கே ஆண்டு இடைவெளியில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்தது எப்படி என்பதை தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கிளப்ப திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply