எந்த அணியில் எத்தனை எம்.எல்.ஏக்கள்: ஆட்சி தப்புமா?

எந்த அணியில் எத்தனை எம்.எல்.ஏக்கள்: ஆட்சி தப்புமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த அதிமுக, அதன்பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓபிஎஸ் அணி என மாறியது. தற்போது எடப்பாடியார் அணி இரண்டாக உடைந்து தினகரன் அணி என்ற புதிய அணி உருவாகியுள்ளது.

இந்த நிலையில் எந்த அணியில் எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தேவையான எம்.எல்.ஏக்கள் முதல்வரிடம் இருக்கின்றதா? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் அடிக்கடி கேட்டு வருகின்றன.

இந்த நிலையில் மொத்தமுள்ள 135 அதிமுக எம்.எல்.ஏக்களில் ஓபிஎஸ் அணியில் உள்ள 10 எம்.எல்.ஏக்களை தவிர்த்து 125 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்தனர். ஆனால் சமீபத்தில் தினகரன் நடத்திய மேலூர் பொதுக்கூட்டத்தில் 20 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதால் அரசுக்கு ஆதரவாக 105 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஓபிஎஸ் அணி ஒருவேளை இணைந்தாலும் 115 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அரசுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

அப்படியானால் மெஜாரிட்டிக்கும் இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே இன்றைய சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் அரசு கவிழும் நிலைதான் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் நான்கு வருடங்கள் முழுமையாக இந்த அரசு இருக்குமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

Leave a Reply