தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழப்பு எவ்வளவு? மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தகவல்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழப்பு எவ்வளவு? மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தகவல்

rajnathsinghதமிழகத்தில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் இன்று ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 40 சதவிகிதம் தொலை தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply