அதிமுகவில் எத்தனை அணி! குழப்பத்தில் உண்மையான தொண்டர்கள்
எம்.ஜி.ஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவில் இன்று எத்தனை அணிகள் இருக்கின்றது என்று தெரியாமல் உண்மையான அதிமுக தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிளந்தது. அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் சசிகலா அணி முதல்வர் ஈபிஎஸ் அணி என்று அழைக்கப்பட்டது. பின்னர் ஈபிஎஸ் அணியில் இருந்து பிரிந்து தினகரன் அணி உருவானது. தற்போது தினகரன் அணியும் இரண்டாக பிரிந்து திவாகரன் அணி என தனியாக இன்னொரு அணி உருவாகியுள்ளது
இந்நிலையில் அம்மாவின் கனவு, சின்னம்மாவின் லட்சியம் என ஃபிளக்ஸ்கள் பளபளக்க மன்னார்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை வரும் 15ம் தேதி நடத்த திவாகரன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு தீவிரமாகப் பணியாற்றி வந்தார்கள். ஆனால் இந்த விழாவை தினகரன் தரப்பு ரத்து செய்துள்ளது. ஆனால், திவாகரன் ஆதரவாளர்களோ, ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் திவாகரன், கூட்டத்தைப் பிரம்மாண்டமாக நடத்திக்காட்டுவார் என்று கூறி வருகின்றனர். அதிமுக எத்தனை அணியாக இருந்தாலும் மத்திய அரசாக கலைக்காத வரையில் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றே கூறப்படுகிறது.