மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி

29-1419855911-mmc

தெரியாமல் மெமரி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள். இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப்படும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்…

முதலில் மெமரி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப்படங்களை எடுக்க கூடாது. தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும், விண்டோஸ் கணினியில் இதை மேற்கொள்ள Recuva மென்பொருளை பயன்படுத்தலாம், மேக் கணினியில் இதை மேற்கொள்ள PhotoRec மென்பொருள் பயன்படுத்தலாம். இந்த இரு மென்பொருட்களும் இலவசமாக பயன்படுத்த முடியும். அடுத்து மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். முதலில் ரெக்குவா மென்பொருளை ஸ்டார்ட் செய்து புகைப்படங்களை தேர்வு செய்ய வேண்டும். போட்டோ ரெக் மென்பொருள் சற்று குழப்பம் வாய்ந்ததாக இருக்கும், முதலில் மேக் பாஸ்வேர்டை டைப் செய்து மென்பொருளை ஸ்டார்ட் செய்து அதன் பின் வரும் முறைகளை பின்பற்ற வேண்டும். ஸ்கேன் செய்து முடித்த பின் அழிந்து போன புகைப்படங்களை மென்பொருள் கண்டறிந்துவிடும். ரெக்குவா மென்பொருளில் ரிக்கவர் பட்டனை அழுத்தி உங்களுக்கு தேவையான இடத்தில் புகைப்படங்களை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம். போட்டோ ரெக் மென்பொருளில் ஏற்கனவே இந்த இடத்தை குறிப்பிட்டுள்ளதால், அந்த போல்டர் சென்றால் அழிந்து போன புகைப்படங்கள் அங்கிருக்கும்.

Leave a Reply