ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தவிர்ப்பது எப்படி?

73d8afef-6e10-4005-94bf-aa3f20553d61_S_secvpf

என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் பல நேரங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென சர்க்கரை அளவு கூடும், குறையும். இதற்கு கீழ் கண்டவை கூட காரணமாக இருக்கலாம். இரவு சரியான தூக்கமின்மை, புது மருந்து, ஒரு கப் அதிக காபி, வெப்பமான சூழ்நிலை,

* என்னதான் செயற்கை இனிப்பினை பயன்படுத்தினாலும் டயட் சோடா கூட திடீர் என சர்க்கரை அளவு அதிகரிக்க காரணம் ஆகலாம்.

* உடலில் நீரின் அளவு குறைவதும் சர்க்கரையின் அளவை கூட்டும். சர்க்கரை பாதிப்புடையோர் அதிக சிறுநீர் செல்வதாலும் உடலில் நீர் சத்து குறையும். தினமும் 2 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் அருந்துவது சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும்.

* ஸ்டீராய்ட் போன்ற சில மருந்துகள் சர்க்கரை அளவை மிகவும் அதிகமாக்கி விடும்.

* பலருக்கு காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதலாகவே இருக்கும். காலை 3-4 மணி அளவில் மறுநாளுக்காக உடலை தயார் செய்யும் ஹார்மோன்களின் செயல்பாடே இதற்குக் காரணமாகின்றது. சிலருக்கு இரவில் எடுக்கும் மருந்தாலும், இரவில் மிகக் குறைவாக சாப்பிடுவதாலும் அல்லது சாப்பிடாமல் இருப்பதாலும் காலையில் சர்க்கரை அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனை மருத்துவர் உதவி கொண்டு சர்க்கரையின் அளவினை சரி செய்ய முடியும்.

* சர்க்கரை பாதிப்புள்ள பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்கள் ரத்தத்தில் கூடுதல் சர்க்கரை அளவினை காட்டும்.

* தூக்கமின்மை என்பது அதிக ‘ஸ்டிரெஸ்’ பாதிப்பினை உடலில் ஏற்படுத்துவதால் சர்க்கரையின் அளவு கூடும். தூக்கம் இயற்கை உடலுக்குத் தரும் நல்ல மருந்து. முறையாக தூங்கும் பழக்கம் 6-8 மணி நேர தூக்கம் சர்க்கரையினை அளவாய் வைக்கும்.

* மிக அதிக வெய்யில், மிக அதிக குளிர் இரண்டுமே சர்க்கரை அளவை கூட்டும். இரண்டுமே உடலுக்கு அதிக ஸ்டிரெஸ் கொடுப்பவை. இதன் காரணமாய் சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கும். எனவே அதிக வெய்யில், அதிக குளிர் இரண்டினையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

* பயணம் செய்யும் பொழுது மருந்து ஏடுக்கும் நேரம், உணவு உட்கொள்ளும் நேரம், உணவு இவை அனைத்தும் மாறுபடக் கூடும். எனவே கையில் அவசர உணவினை வைத்திருங்கள். தண்ணீர் குடியுங்கள், சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் வீட்டிலேயே ‘க்ளுகோபீட்டர்’ கொண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளலாம். ஆனால் கைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு பரிசோதித்து கொள்ளுங்கள். ரத்தத்தில் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவினை சீராய் வைத்திருக்க உதவும்.

சர்க்கரையின் அளவு உணவின் மூலமே அதிக மாறுதலைப் பெறுகின்றது. சர்க்கரை நோய் முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு இரண்டிலும் சாப்பிட்ட 2 மணி நேரத்தில் சர்க்கரை அளவு அதிகம் காணப்படுகின்றது. உங்கள் உணவில் அதிக கார்போஹடிரேட் உள்ளதா அல்லது மருந்தின் அளவு போதவில்லையா என்பதை இந்த பரிசோதனை சொல்லிவிடும்.

உணவுக்குப்பிறகு அதிகரிக்கும் சர்க்கரையினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. உணவுக்கு முன் உணவுக்குப்பின் என எடுக்கப்படும் சோதனைகளால் உணவின் அளவை மருந்தின் அளவை சீர் செய்து கொள்ள முடிகின்றது. பிரிவு ஒன்று சர்க்கரை பாதிப்பில் உணவுக்கு முன் பரிசோதிக்கும் முறையினால் சரியான அளவு இன்சூலின் எடுத்துக் கொண்டோமா என்பதனை உணர முடிகின்றது.

பிரிவு இரண்டு சர்க்கரை பாதிப்பில் உணவுக்கு முன் பரிசோதிக்கும் சர்க்கரையினால் உங்கள் உடல் மருந்தின் பலத்தில் எந்த அளவு ஈடுகொடுக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது. யாரெல்லாம் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

* இன்சூலின் எடுத்துக் கொள்பவர்கள்

* கர்ப்ப காலம்

* மருந்தினால் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த சிரமம் படுபவர்கள்.

* குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள்

* அறிகுறிகள் எதுவும் இல்லாமல் குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள்.

* அதிக சர்க்கரை அளவின் காரணமாக சிறுநீரில் பாதிப்பு இருப்பவர்கள். இவர்கள் அனைவரும், க்ளுகோ, மீட்டர் உதவியுடன் வீட்டிலேயே சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் குளுகோ மீட்டரில் எப்படி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்?

* கையை நன்கு கழுவுங்கள்

* க்ளுகோ மீட்டரில் பரிசோதனை ஸ்டிரிப்பினை வையுங்கள்.

* விரலின் நுனியில் கொடுக்கப்பட்டுள்ள ஊசியால் லேசாக குத்துங்கள்.

* ஸ்டிரிப்பின் அடையாள பகுதியில் ரத்தம் படச் செய்யுங்கள்.

* சில நொடிகளில் சர்க்கரையின் அளவை க்ளுகோ மீட்டர் காண்பிக்கும்.

அளவு மாறுபடும் விவரம்:

* சர்க்கரை பாதிப்பின் காலம்.

* வயது கூடிய முதுமை

* இருதய பாதிப்புகள்

* பாதிப்புடையோரின் கவன ஈடுபாடு இவற்றினைக் கொண்டு சர்க்கரையின் அளவில் மாறுதல் இருக்கும். சிறுநீர் பரிசோதனையை விட ரத்த பரிசோதனையே சரியான அளவாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 மி.மி கீழ்போவது ஆபத்தானது இதனை தவிர்க்க.

* உங்கள் மருந்தை புரிந்து கொள்ளுங்கள்.

* வேகமாக வேலை செய்யும் இன்சூலின் எடுத்துக் கொள்பவராயின் 2 மணி நேரத்தில் உங்கள் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்பதை கண்டிப்பாக அறிய வேண்டும்.

* இன்சுலின் உபயோகிப்பவர்கள் இரண்டு வகைகளை மருந்துகளை தவறாக கலந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* சர்க்கரை உடலில் குறையும் போது ஏற்படும் அறிகுறிகளை நன்கு அறிந்து வைத்திருங்கள்.

* கையில் எப்பொழுதும் பிஸ்கட் போன்று ஏதாவது இருக்கட்டும் சர்க்கரை குறைந்து வெலவெலப்பு ஏற்பட்டால் உடனடியாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

* நன்கு தூங்குகள்

* இன்சுலின் போட்டுக் கொண்டு சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

உணவுக்கு முன் சர்க்கரையின் அளவு 70-130 மிகி/டெசிலி. உணவு உண்டு 2 மணி நேரத்திற்குப் பிறகு 180 மிகி/டெசிலிக்கு குறைவாக என குறிப்பிடுகின்றது. இந்த அளவீட்டின் முறையினை விட குறைவான அளவினையே நம் நாட்டில பரிந்துரைக்கின்றோம்.

இங்கு உணவு முறை அதிக அரிசியோடு இருப்பதாலும், இந்தியா டயாபடிக் தலைநகரம் என வர்ணிக்கப்படுவதாலும், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் இருப்பதாலும் இதனை மிகுந்த கவனத்தோடு நம் நாட்டில் பார்க்க வேண்டி உள்ளது. காலை வெறும் வயிற்றில் 100 மிகி/டெசிலி கீழும், உணவுக்கு 2 மணி நேரம் பிறகு 120 மிகி/டெசிலி இருப்பதுமே அனைவருக்கும் சிறந்தது.

உங்கள் ரத்த அளவை அடிக்கடி நீங்களே பரிசோதித்துக் கொண்டு எழுதும் பொழுது எந்த உணவு ஸ்டிரெஸ், உடல் உழைப்பு இவை உங்கள் சர்க்கரை அளவினை பாதிக்கின்றது என்பதனை உங்களாலேயே உணர முடியும்.

 

Leave a Reply