சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி?

download (2)

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு ஏற்படும் அச்சம் கால் புண் ஏற்படுமா? என்பது தான். அதனால் காலை இழக்க நேரிடுமா என்று எல்லோரும் அச்சப்படுகின்றனர். இதற்கு காரணம் அளவுக்கு அதிகமான சர்க்கரை அளவு. கால் எரிச்சல், கால் மருத்து போதல். கால் புண் ஆகியவை தான்.

இன்றைக்கு மனித குலத்திற்கு பெரும் சவாலாக சர்க்கரை நோய் விளங்குகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சர்க்கரை நோய் பாதிப்பு உயிரை பறிக்கும் அளவுக்கு உள்ளது. இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது, சிகிச்சை பெறுவது குறித்து சில ஆலோசனைகள்:

அளவுக்கு அதிகமாக சர்க்கரை அளவு

நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு சர்க்கரைக்கு எப்போதாவது ஒரு முறை சர்க்கரை அளவை கண்டறிவது. மருத்துவர் கொடுத்த மருந்து சீட்டை காண்பித்து மாத்திரை சாப்பிடுவது தான். சர்க்கரை என்பது நிரந்த நோய் அல்ல. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறும் அளவு. எனவே அவ்வப்போது மாதம் ஒரு முறை சர்க்கரையை பரிசோதித்து கொள்ளலாம். உடலில் ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்று சோதித்து கொள்ள வேண்டும்.

சிறுநீரகம், கால், கண், இருதயம் போன்ற உறுப்புகள் சீராக உள்ளதா என்பதையும் அறியவேண்டும். அதற்கு ஏற்றால் போல் மருத்துகளையும் மாற்றி சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக (300) மேல் இருந்தால், பெரும்பாலும் கால் பாதிப்பை ஏற்படுத்தும். கால் எரிச்சல், கால் மருத்து போதல் அதற்கான அறிகுறி.

கால் எரிச்சல்- கால்மருத்து போதல்

சர்க்கரை நோயாளிகள் கால் எரிச்சல் உருவாவதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நரம்புகள் பாதிக்கப்பட்டு எரிச்சலை உண்டாக்கும். இதை கண்டு கொள்ளாவிட்டால், நாளடைவில் கால்புண் உருவாகி, காலை இழக்க நேரிடும். கண்டிப்பாக சரி செய்ய வேண்டும். புதிய மருத்துகளை கொண்டு நோயை குணப்படுத்திவிடலாம். புதிய மாத்திரைகளால் குணப்படுத்த முடியாததை லேசர் கருவி மூலம் குணப்படுத்தலாம்.

கால் புண்:

கால் எரிச்சல், கால் மருத்து போதல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு திடீரென காலில் ஒரு கொப்பளம் ஏற்படலாம். அது பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும். அதற்கு உடனடியாக மருத்துவரை அணுகி, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, கால்புண் பாதிப்பை குறைக்கலாம். ஒருவருக்கு அறுவை சிகிச்சை என்றால் பயம், ஆனால் கால் புண் இருக்கிறது, என்ன செய்வது என்று கேட்டால், லேசர் நவீன கருவி மூலம் கால் எரிச்சல், கால் புண், ஆறாத புண், அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியாத புண்ணை கூட, எளிதில் வலியில்லாமல் கதிர் வீச்சு மூலம் குணப்படுத்தலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை பாதத்தை பரிசோதனை செய்து கொள்ளுதல் அவசியமாகும். பயோதெர் மோ மீட்டரி, போடோஸ் கேன், விப்ரோ மீட்டர் போன்ற நவீன கருவிகள் மூலம் கால்களின் புண் ஏற்பட வாய்ப்புள்ளதை முன் கூட்டியே அறிந்து கொண்டு, அதற்கான மாத்திரைகளை உட்கொண்டால் கால் இழப்பை தடுக்கலாம்.

Leave a Reply