ஸ்மார்ட்போனில் தினந்தோரும் பல புகைப்படங்களை எடுக்கின்றீர்கள் அவற்றை கொண்டு வீடியோக்களை உருவாக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா, ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.
செயலி ஆன்டிராய்டு ஸ்மாரப்ட்போனில் பிக்பேக் “PicPac” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
புகைப்படம் இன்ஸ்டால் செய்த பின் புகைப்படங்களை உங்களது கருவியில் இருந்தும் எடுத்து கொள்ளலாம் அல்லது இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் இருந்தும் பயன்படுத்தலாம்.
ஃப்ரேம் தேவையான புகைப்படங்களுக்கு ஏற்ற நேரத்தை செட் செய்ய வேண்டும், ஒரு புகைப்படத்திற்கு அதிக பட்சம் 10 நொடிகள் வரை செட் செய்ய முடியும்.
நெக்ஸ்ட் அடுத்து செயலியின் எடிட்டிங் ஸ்கிரீனில் இருக்கும் நெக்ஸ்ட் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், இங்கு பெயர் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ள முடியும்.
க்ரியேட் அடுத்து க்ரியேட் வீடியோ என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
நேரம் புகைப்படங்களுக்கு ஏற்ற நேரம் ஆகும், அதுவரை காத்திருக்க தான் வேண்டும்.
ஆடியோ அடுத்து வீடியோவிற்கு ஆடியோ சேர்க்க வேண்டும், ஆடியோவை ரெக்கார்டு செய்யலாம், அல்லது கருவியில் இருப்பதை பயன்படுத்தலாம் அல்லது சவுண்டு க்ளவுடில் இருந்தும் பயன்படுத்தலாம்.
ஆன்லைன் வீடியோவில் ஆடியோ சேர்க்கப்பட்ட பின் அதை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் பகிரந்து கொள்ளலாம்.
மெனு அடுத்து செயலியின் ஹோம் மெனு சென்று அடுத்த வீடியோவை பதிவு செய்யலாம்.
போல்டர் பதிவு செய்த வீடியோக்களை செயலியின் டூல் பாரில் இருக்கும் போல்டரில் இருந்து எடுத்து கொள்ளலாம்.