மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கேமராக்களை எப்படி கண்டுபிடிக்கலாம்??

14

கேமரா இல்லாத ஆட்களைக் காண்பதே கடினம் என்றாகி விட்டது. அந்தளவிற்கு மொபைல் ஃபோன் போல கேமரா மோகமும் இன்றைய தலைமுறையினரை ஆட்டிப் படைக்கின்றது.

இந்த கேமராக்களில் பலவகை உள்ளன. அவை பயனாளிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அதன் பயன்பாடு அனைவரையும் கவர்ந்ததோடு, அதன் தேவையும் அதிகரித்து. ஆனால், தற்போது இருக்கும் விஞ்ஞான உலகில் கேமரா பல முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. முதன் முதல் கண்டுபிடிக்கப் பட்ட கேமரா பெரிய அளவில் இருந்தது. தற்போது கடுகளவு வரை கேமராக்களின் அளவு குறைந்துவிட்டது.

இவற்றை முதலில் புலனாய்வுத் துறையினர், தாங்கள் சந்தேகிக்கும் நபர்களை உளவு பார்க்க கண்டுபிடித்தனர். ஆனால், அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கின்றது. பொது இடங்கள், ஜவுளிக் கடைகள் போன்ற இடங்களில் உடைமாற்றும் அறைகளிலோ, இல்லை கழிப்பிடங்களிலோ இம்மாதிரியான கேமராக்களை பதுக்கி வைத்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதனைத் தடுக்க மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று நாம் இங்கு காணலாம்.

இம்மாதிரியான சில கேமராக்கள் செயல்படும் போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும், அதனால் கூர்ந்து கவனித்தால் அவற்றை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

நீங்கள் இருக்கும் அறையில் உள்ள அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விளக்குகள் இருக்கும், இதன் மூலம் கேமராக்களை கண்டுபிடிக்கலாம்.

மேலும், இருட்டாக இருக்கும் அறையில் டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண்னாடிகளில் பார்க்கவும். பின்ஹோல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அதனால் டைர்ச் லைட் கொண்டு தேடும் போது எங்காவது வெளிச்சம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கின்றது உஷார்.

Radio Frequency(RF) சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற்சி செய்யலாம். உங்கள் அருகில் இருக்கும் கேமராக்களை இது காட்டி கொடுத்துவிடும்.

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிய உங்க செல்போனையும் பயன்படுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், அப்போது விநோதமான சப்தம் உங்களுக்கு கேட்டால் அங்கு கேமரா இருக்கின்றது.

Leave a Reply