உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி

download (1)

அழகாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. உடலில் தங்கியுள்ள நச்சுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி விட வேண்டும். நச்சுக்கள் உடலில் இருந்தால், அவை சருமத்தின் பொலிவை கெடுப்பதோடு, உடலில் வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

இதனால் உடல் சரும ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஆகவே அழகாக.வும், ஆரோக்கியமாகவும் காணப்பட வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வளியேற்றி விட வேண்டும். இங்கு வீட்டிலேயே உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கெமிக்கல் சேர்க்கப்படாத காய்கறிகள் இயற்கை உரங்கள் பயன்படுத்தி வளர்க்கப்பட்ட காய்கறிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் நச்சுக்கள் சேர்வது குறைவதோடு, உடல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும். உதாரணமாக, கோடைக்கால பழங்கள் மற்றும் காய்கறிகளான மாம்பழம், மாங்காய், முருங்கைக்காய் போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

பால் பால் உடலுக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் அது பாக்கெட் பாலே தவிர, மாட்டுப் பால் அல்ல. எனவே பாக்கெட் பால் அதிகம் குடிப்பதை தவிர்த்து, மாட்டுப் பாலை தேர்ந்தெடுத்து குடியுங்கள். அதுவும் நன்கு காய்ச்சி, சூடாக குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ் தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, தேன் சேர்த்து கலந்து குடித்து வர, நச்சுக்கள் உடலில் சேர்வது தடுக்கப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரே வகையான உணவு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமானால், பத்து நாட்கள் தொடர்ந்து ஒரே வகையான உணவை உட்கொள்ளுங்கள். உதாரணமாக, மதியம் கிச்சடி மற்றும் இரவில் வேக வைத்த காய்கறிகள் என்று பத்து நாட்கள் சாப்பிட வேண்டும். இக்காலத்தில் டீ அல்லது காபி போன்றவற்றை அருந்தக்கூடாது. இப்படியே பின்பற்றி வர, பத்தாவது நாளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Leave a Reply