ரூ.251க்கு ஸ்மார்ட்போன் கொடுப்பது மோசடி நிறுவனமா? பாஜக எம்.பியின் சந்தேக கேள்விகள்

ரூ.251க்கு ஸ்மார்ட்போன் கொடுப்பது மோசடி நிறுவனமா? பாஜக எம்.பியின் சந்தேக கேள்விகள்

freedom-251-640x353சந்தையில் ரூ.5000, ரூ.10,000 என ஸ்மார்ட்போன்களின் விலை இருக்கும் நிலையில் உலகிலேயே மிக குறைந்த விலையான ரூ. 251-க்கு ஸ்மார்ட் போனை எப்படி விற்பனை செய்ய முடியும்?’’ என்று பாஜக எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத்.

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் கனவுத்திட்டமான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ரிங்கிங் பெல்ஸ், என்ற நிறுவமம் ‘பிரீடம் 251’ என்ற மொபைலை ரூ.251க்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஒரு மோசடி நிறுவனமா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், அந்நிறுவனத்தின் உரிமையாளரின் நம்பகத்தன்மை குறித்து தீர விசாரணை செய்ய வேண்டும் என்றும் பாஜக எம்.பி. கிரித் சோமையா கூறியுள்ளார். மேலும் சந்தேகங்களை கடிதமாக எழுதி தொலைத்தொடர்பு அமைச்சகம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), நுகர்வோர் அமைச்சகம், செபி, நிறுவனங்கள் துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதுகுறித்து கருத்துகூறியுள்ள ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சதா அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது “இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கிடைக்கும் உதிரி பாகங்களை ஒன்றிணைத்து தயாரிக்கப்படுகின்றன. மேலும் ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்வதால் இந்த விலைக்கு எங்களால் விற்பனை செய்ய முடிகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply