ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை வீட்டில் செய்வது எப்படி?

skin lighting

டூ வீலர்ல போறவங்க, பஸ்ல போறவங்க எல்லாரும் இன்னிக்கு தூசி, மாசுகளோட பாதிப்புக்குள்ளாகறாங்க. அழகை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. எல்லாருக்கும் ஒரு அழகு தேவைப்படுது. அவங்களுக்கானது தான் இந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை.

இந்த சிகிச்சைக்கான செட் அப்படியே கிடைக்குது. முதல்ல அதுல உள்ள கிளென்சரை முகத்துல வட்டமா தடவி, பஞ்சால துடைத்து எடுக்க வேண்டும். அடுத்து ஸ்கின் டானிக் தடவிட்டு, கடல்பாசி கலந்த ஸ்க்ரப் உபயோகிக்கணும்.

இரண்டு நிமிஷம் கழிச்சு, முகத்தைத் துடைத்து எடுத்து விட்டு, கிரீம் வச்சு மசாஜ் பண்ணணும். கடைசியா பீல் மாஸ்க். அதை அப்படியே முகத்துல தடவிட்டு, 10 நிமிஷம் கழிச்சு உரித்து எடுத்தால் முகம் பளீர்னு மாறியிருக்கும்.

கண்களுக்கு அடியில் கருவளையம் அதிகமா இருந்தா, குங்குமப் பூ கலந்த மாஸ்க் உபயோகிக்கலாம். பளபளப்பா தெரியணும்னு விரும்பறவங்க கோல்ட் ஜெல் உபயோகிச்சு, பத்து நிமிஷம் விட்டுத் துடைச்சா போதும்.

இதெல்லாம் வீட்டிலேயே சுலபமா செய்யக் கூடிய சிகிச்சையாக இருந்தாலும், முதல் முறை ஒரு அழகுக்கலை நிபுணர்கிட்ட உங்க சருமத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு செய்யறது பாதுகாப்பானது.

Leave a Reply