ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி அந்த ஆதார் அட்டையை முக்கிய ஆவணங்களில் இணைக்க வேண்டும் என்பதும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை, வங்கி அக்கவுண்ட், பாஸ்போர்ட், கேஸ் இணைப்பு ஆகியவற்றில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது பான் எண்ணோடும் ஆதார் எண்ணை இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்
வருமான வரித்துறையின் லாக் இன் பக்கத்துக்கு முதலில் வரவும்.
இதற்கு முன் எப்போது இங்கே வந்தோம் எனப் பலருக்கும் நினைவில்லாமல் இருக்கலாம். அல்லது பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்திருக்கலாம். லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு நினைவில் இருப்பவர்கள் லாக் இன் செய்யலாம். மற்றவர்கள் Forgot Password க்ளிக் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
reset password
உங்கள் பான் நம்பர்தான் உங்கள் யூஸர் ஐடி. அதையும் captcha code-ஐயும் டைப் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
otp page
இங்கே டிராப்டவுன் பாக்ஸில் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் மூன்றாவது OTP ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அடுத்த பக்கத்தில் நமது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்தால், அதற்கு அனுப்புவார்கள். அதை வைத்து பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம். மொபைல் எண் பழைய எண்ணாக இருந்தால், புதிய எண்ணைக் கொடுத்து அதையும் இங்கே மாற்றிக்கொள்ளலாம்.
பாஸ்வேர்டு மாற்றிய பின் 12 மணி நேரம் கழித்தே பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
12 மணி நேரம் கழித்து லாக் இன் செய்ததும், ஒரு பாப் அப் விண்டோ வரும். அதில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா எனக் கேட்கும். அந்த பாப் அப்பை விட்டுவிட்டால், புரொபைல் செட்டிங்குக்குப் போய்க்கூட ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
இங்கே உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கவனமாகப் பதிவு செய்யவும். அனைத்துத் தகவல்களும் முன்னர் கொடுத்த தகவல்களோடு பொருந்தினால், ஆதார் எண்ணைக் கேட்கும். அதையும் டைப் செய்து “Link now” கொடுத்தாlல் பான் எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்
“your aadhar number is successfully linked with pan card” என மெசெஜ் வந்தால், முதல் வரியில் சொன்ன ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் பெயரோ, இனிஷியலோ மேட்ச் ஆகவில்லை என மெசெஜ் வந்தால், உடனடியாக ஆதார் உதவி எண்ணைத் (1800-300-1947) தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியில் ஜெயிக்கப்போவது மத்திய அரசுதான். அதனால், சசிகலா அணியும், ஓ.பி.எஸ் அணியும் இணைகிறார்களோ இல்லையோ.. உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எப்படியாவது இணைத்தே ஆக வேண்டும்.