ஹிருத்திக் ரோஷன், காத்ரீனா கைப், பிபாஷா பாசு ஆகியோர் நடிப்பில் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் பேங் பேங் என்ற பாலிவுட் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் டப் செய்து வெளிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஹிருத்திக் ரோஷனின் க்ரீஷ் 3, மற்றும் காத்ரீனா கைப்பின் தூம்3 ஆகிய இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்து வரவிருக்கும் பேங் பேங் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் , கேமரூன் டயஸ் நடித்து உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற “நைட் அண்ட் டே” (Knight and Day) என்ற படத்தின் ரீமேக்தான் இந்த “பேங் பேங்” திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பேங் பேங் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வருகிறது.