தீபாவுக்கு குவியும் தொண்டர்கள் ஆதரவு. கலக்கத்தில் சசிகலா தரப்பு

தீபாவுக்கு குவியும் தொண்டர்கள் ஆதரவு. கலக்கத்தில் சசிகலா தரப்பு

வரும் 29ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பதவியை காப்பாற்றி கொள்ள நினைக்கும் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பிறர் வேண்டுமானால் சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கலாம். ஓட்டு போடும் பொதுமக்க்ள் இன்று வரை சசிகலாவை கட்சியின் தலைவராக ஏற்றுகொள்ள தயாராக இல்லை

இதை நிரூபிப்பது போல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு உதாரணமாக  கோவையில் உள்ள குறிச்சிப் பகுதியில் தீபாவை ஆதரித்து பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த பேனரில், ”ஜெயலலிதாவால் ஆசிர்வதிக்கப்பட்ட தீபாவின் தலைமையை ஏற்றுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி தீபாவை, ”குலவிளக்கே” ”ஆளப்பிறந்தவளே” ”அம்மாவின் அவதாரமே” என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு யார் என்பது தேர்தல் வந்தால் நிச்சயம் தெரிந்துவிடும்

Leave a Reply