சீனாவில்14 ஆண்டுகளுக்கு பின் ஏற்படும் பயங்கர பூகம்பம். 400 பேர் பலி

earthquake 1நேற்று மாலை சீனாவில் ஏற்பட்ட பயங்கர பூமியதிர்ச்சியில் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர், மேலும்  1,400 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுவான் என்ற மாகாணத்தில் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் இது என்று அமெரிக்காவில் உள்ள புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தைவிட்டு மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள தொலை தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சீனாவின் அனைத்து பகுதிய்களில் உள்ள மீட்புப்படையினர் விரைந்து சென்றூ மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை சுமார் 400 பேர் பலியாகியுள்ளதாகவும், 1400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இடிபாடுகளுக்கிடையே இன்னும் நூற்றுக்கணக்கானோர் சிக்கி இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 180க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் பேரிடர் மேலாண்மைக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது

earthquake earthquake 6 earthquake 5 earthquake 4 earthquake 3 earthquake 2na

Leave a Reply