இந்தியாவின் மிக பிரபலமான கோவில்களின் ஒன்றான புரி ஜெகந்நாதர் கோயில் அருகே இருக்கும் மடத்தின் வளாகத்தில் மூன்று மனித மண்டையோடுகளை போலீஸார் நேற்று கைப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மர்மச் சாவு என வழக்குப் பதிவு செய்யப்பட்டு தடய அறிவியல் குழுவினரின் உதவியுடன் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக அந்த பகுதி காவல்துறை ஆய்வாளர் தயாநிதி நாயக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வட பகுதியில் அமைந்துள்ள உத்தரப்ர்ஷ்வா என்ற மடத்தின் வளாகத்தில் காய்கறிச் சந்தையின் கழிவுகள் கொட்டப்படுவது வழக்கம். இந்த பகுதியில் காய்கறி கழிவுகளை கொட்ட வந்த காய்கறி ஒருவர் அந்த குவியலில் மண்டையோடுகள் கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போலீஸார், மண்டை ஓடுகளை மீட்டுபுவனேசுவரம் தடயவியல் சோதனைக் கூடத்துக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்
மண்டையோடுகள் மிகவும் பழையதாக இருப்பதையடுத்து, மாந்திரீகம் செய்துவிட்டு யாரோ சிலர் அவற்றை மண்ணில் புதைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.