ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற 700 பேர்களின் கதி என்ன? திடுக்கிடும் தகவல்

boat sunkகள்ளத்தனமாக அகதிகளாக புகலிடம் தேடி படகில் சென்ற சுமார் 700 பேர்களில் பெரும்பாலானோர் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்திருக்கலாம் என்ற திடுக்கிடும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. லிபியா கடலில் கவிழ்ந்ததாக கூறப்படும் இந்த படகில் சென்றவர்களை மீட்க மீட்புப்படையினர் விரைந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கள்ளத்தனமாக மீன்பிடி படகுகளின் மூலம் அகதிகளாக செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பாவுக்கு ஒரு மீன்பிடி படகில் சுமார் 700 பேர் கிளம்பி சென்றனர். அந்த படகு நேற்றிரவு லிபியா நாட்டின் கடல் எல்லை வழியாக சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தெற்கு இத்தாலியைச் சேர்ந்த லம்பெடுசா தீவின் அருகே திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில், அந்தப் படகில் இருந்த 700 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதுவரை 28 பேர் மட்டுமே உயிருடன் நீந்தி கரைக்கு திரும்பியுள்ளதாகவும் மீதியுள்ள 600க்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

விபத்துக்குள்ளான மீன்பிடி படகை ஒட்டி ஒரு சரக்கு கப்பல் வந்தததால் படகை திருப்ப முயன்றதாகவும் அப்போது படகில் இருந்தவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் படகின் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறத்துக்கு மாறிதால் நிலைதடுமாறி அந்தப் படகு கடலில் கவிழ்ந்ததாகவும் உயிர் தப்பிய சிலர் கூறி உள்ளனர்.

மேலும், இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் இத்தாலி நாட்டு கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையை சேர்ந்த கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply