துபாயின் உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தில் தீவிபத்து. பெரும் பரபரப்பு.

dubai fire 1துபாயில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தின் 79வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துபாயின் மரினா நகரில் அமைந்துள்ள 1105 அடி உயரமுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் அந்த கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் பதட்டம் அடைந்து கட்டிடத்தில் இருந்து வெளியேறியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
 
 79 மாடிகளை கொண்ட டார்ச் என்ற விண்ணைத் தொடும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பு உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாகும்.  இந்த கட்டிடத்தின் 50-வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், தீ அடுத்தடுத்த மாடிகளில் வெகுவேகமாக பரவியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தீவிபத்து காரணமாக அப்பகுதியில் இருந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தகவல் கிடைத்தவுடன் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்திறங்கிய தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கட்டிடத்தின் இரண்டு பக்கமும் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும்,  1105 அடி உயரம் உள்ள அந்த பிரமாண்ட கட்டிடத்திலிருந்து நெருப்பு மழை பொழிந்ததாகவும் கூறியுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் மற்றும் தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

 Dubai-Building Fire dubai fire 5 dubai fire 6 dubai fire 7 dubai fire 8 dubai fire

Leave a Reply