7 பேர் விடுதலை அறிவிப்பை எதிர்த்து சென்னையில் தமிழக காங்கிரஸ் உண்ணாவிரதம்.

மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்ட மூன்று பேர்கள் உள்பட ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சென்னையில் தமிழக காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ராஜிவ் கொலையின்போது கொல்லப்பட்ட 16 பேர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே நேற்று 7 பேர்களின் விடுதலை அறிவிப்புக்கு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. அதையடுத்து இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் தலைமையில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. ராஜீவ் கொலையின்போது கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்ற கோஷத்துடன் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply