அடுத்த 3 நாட்களுக்கு சூறாவளி!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென் தமிழகம் மற்றும் வட தமிழத்தின் உள்மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 3 நாட்கள் தமிழகம், புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்தமிழக கடலோரப் பகுதிகள் ,மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்