முதலிரவு அன்று மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கணவர்
திருமணம் ஆன முதல் நாளே மனைவியை முதல் இரவு அன்று தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கணவரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது பெரும் கனவுடன் அவர் முதலிரவு அறைக்குள் சென்றபோது கணவர் வரதட்சிணை குறித்த கேள்விகளையே மாறி மாறி கேட்டுள்ளார்
ஒரு கட்டத்தில் வரதட்சிணை குறைவாக இருப்பதால் அதிர்ச்சி அடைந்த கணவர் மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு தூக்கில் தொங்க விட்டு கொலையும் செய்துள்ளார்.
இதனை அடுத்து மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய நிலையில் போலீசாரின் விசாரணையில் கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து கணவரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்