செல்போனால் ஒரே மணி நேரத்தில் விவாகரத்து ஆன திருமணம்.

செல்போனால் ஒரே மணி நேரத்தில் விவாகரத்து ஆன திருமணம்.
texting1
பெங்களூரில் உள்ள இளம்பெண் தனது மொபைலில் உள்ள எஸ்.எம்.எஸ்களை தனது கணவர் படித்தார் என்பதற்காக கத்தியால் விரல்களை வெட்டிய அதிர்ச்சி சம்பவம் குறித்து பார்த்தோம். இந்நிலையில் இதே செல்போனால் ஒரு ஜோடி திருமணமான ஒரே மணி நேரத்தில் விவாகரத்து செய்துள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஜோடிக்கு சமீபத்தில் மிகவும் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு ஓய்வு எடுக்க வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் (சாட்) செய்து கொண்டிருந்தார். மணமகன் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாமலும் மணமகனை கண்டுகொள்ளாமல் செல்போனில் உரையாடுவதிலேயே மிகவும் குறியாக இருந்தார். இது குறித்து கேட்டதற்கு திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் பதில் தெரிவிப்பதாக கூறினார்.

உடனே ஆத்திரமடைந்த மணமகன் உனக்கு நான் முக்கியம் இல்லையா? இல்லை அந்த செல்போன் முக்கியமா? என்று கேட்டதற்கு தனக்கு செல்போன் தான் முக்கியம் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு ஓட்டலை விட்டு கோபத்துடன் வெளியேறினார். செல்போன் என்ற கருவி மனித வாழ்க்கையில் நுழைந்த பின்னர் எந்த அளவுக்கு பயன்களை கொடுக்கின்றதோ அதே அளவுக்கு துன்பத்தையும் கொடுக்கின்றது என்பது தான் உண்மை.

Leave a Reply