இந்திய தேசிய கொடியை அவமதித்ததாக பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு ஐதராபாத் நீதிமன்றம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கமல்ஹாசனுடன் தசாவதாரம் என்ற தமிழ்ப்படத்திலும் மற்றும் பாலிவுட், ஹாலிவுட் படத்திலும் நடித்து புகழ்பெற்றவர் மல்லிகா ஷெராவத். இவர் ஜாக்கி சான் உடன் “தி மித்” ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
37 வயதனநடிகை மல்லிகா ஷெராவாத் தற்போது “டர்டி பாலிடிக்ஸ்” என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில், தேசியக் கொடியை மேலாடையாக அணிந்து கார் மீது உட்கார்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்து நடித்துள்ளார். இந்த போஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
நடிகை மல்லிகாவின் இந்த கவர்ச்சி போஸைக் கண்டித்து டி.தனகோபால் ராவ் என்பவர் ஐதராபாத் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைதொடர்ந்தார். அதில், இந்திய மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் தேசிய கொடியை மேலாடையாக அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளதால் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, நடிகை மல்லிகா ஷெராவத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூயிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை மல்லிகா ஷெராவத், மத்திய அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் தணிக்கை வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவுக்கு ஒரு மாதத்திற்குள் தகுந்த விளக்கம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒரு மாதத்தில் நடிகை மல்லிகா தகுந்த விளக்கம் அளிக்கவில்லை என்றால் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.