தனியாக வந்தால் ரூம் இல்லை. பெண்களுக்கு கண்டிஷன் போடும் ஓட்டல்

தனியாக வந்தால் ரூம் இல்லை. பெண்களுக்கு கண்டிஷன் போடும் ஓட்டல்

இன்றைய உலகில் ஆணுக்கு சமமாக வெளியூர்களில் வேலை செய்து வரும் பெண்கள், பணி நிமித்தம் காரணமாகவும், சொந்த விஷயம் காரணமாகவும் வெளியூருக்கு சென்று தங்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஓட்டல் ஒன்று தனியாக வரும் பெண்களுக்கு குறிப்பாக திருமணம் ஆகாத பெண்களுக்கு அறை இல்லை என்ற கண்டிஷனை போட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இளம்பெண் கலைஞர் நுபுர் சரஸ்வத் என்பவர் ஐதராபாத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு தனியாக வந்துள்ளார். அவர் ஏற்கனவே அந்த ஓட்டலில் தங்குவதற்கு ஆன்லைனில் புக் செய்திருந்தும் ஓட்டல் நிர்வாகம் அவரை தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று ஓட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டற்கு பதிலளித்த நிர்வாகம், ” நீங்கள் தனியாக வந்துள்ளதால் உங்களை தங்குவதற்கு அனுமதிக்க வில்லை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து நுபுர் தனது ஃபேஸ்புக்கில் ஆவேசமாக பதிவு கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இவருடைய கருத்துக்களை படித்த நெட்டிசங்கள் அந்த ஓட்டல் நிர்வாகத்தை கடுமையாக சாடிவருகின்றனர். இந்தநிலையில்” தனியாகவோ அல்லது திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு இந்த இடத்தில் பாதுகாப்பு இல்லததால் தங்க அனுமதிக்கப்படவில்லை ” என்று ஓட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply