நேற்று முன் தினம் நடந்த 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இருந்த தோனி, அவரே அனைத்து பந்துகளையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடியதால் அவர் மீது கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு தோனி விளக்கம் அளித்ததோடு, தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் எடுப்பது என்பது சிறிது கடினமான வேலையாகும். முதல் பந்தில் சிக்சரும், 4–வது பந்தை பவுண்டரியும் அடித்தேன். இருப்பினும் கடைசி 2 பந்தை எதிர்கொள்கையில் நெருக்கடி இருந்ததல் என்னால் அடித்து ஆட முயலவில்லை. பந்து பேட்டிங் சரியான இடத்தில் சிக்காததால் இந்தியா தோல்வியடைந்தது.
அம்பத்தி ராயுடு அடித்து ஆடக்கூடிய திறமை கொண்ட வீரர் தான். இருப்பினும் அவர் அப்போது தான் களம் கண்டு இருந்தார். இதனால் அதிக பந்துகளை எதிர்கொள்ளாத அவர் வந்த உடனே அடித்து ஆடுவது கடினம் என்று கருதி கடைசி ஓவரில் எல்லா பந்துகளையும் நானே எதிர்கொண்டு அணியை வெற்றிக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்து ஆடினேன். ஆனால் நான் நினைத்தபடி நடக்கவில்லை. எனவே இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.