1907ஆம் ஆண்டு குழந்தை ஸ்வாமினாதனாக உலா
வந்து கொண்டிருந்த ஸ்வாமிகளாக அவதாரம்
எடுத்த ஆண்டு! யாருமே எளிதில் மறக்க இயலாத ஆண்டு!
குடந்தையில் ஸ்வாமிகளுக்கு சிறந்த வரவேற்பு
அளிக்கப்பட்டது. என் தந்தையான ப்ரம்ம ஸ்ரீ
சங்கர சாஸ்திரிகள் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி
அம்மன் கோவிலில் ஸ்தானிகராக இருந்தபடியால்,
புதிதாகப் பட்டத்துக்கு வந்த ஸ்வாமிகளுக்கு
கோவில் ப்ரஸாதத்தையும்,அன்னை காமாக்ஷியின்
சாதராவையும் கொண்டு வந்து போர்த்தும் பாக்கியம்
பெற்றார். ஆசார்யாள் ப்ரசாதத்தைக் கண்டு
மகிழ்ச்சி அடைந்தாராம்! என் தகப்பனார் அந்தக்
காட்சியைக் கண்டு அமுத ப்ரவாகத்தில் நீந்திய
உணர்ச்சி அடைந்தாராம்.
பல ஆண்டுகள் கழிந்து என் தகப்பனார் கைவல்ய
பதம் எய்தியபின், நான் அந்தப் பொறுப்பில்
நியமிக்கப்பட்டேன்.
1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம்தேதி பங்காரு
காமாக்ஷி அம்மன் கும்பாபிஷேகம். பத்து
தினம் சென்ற பின் ஸ்வாமிகள் பாதயாத்திரை
புறப்பட்டுவிட்டார்கள்.
ஸ்ரீமடத்தின் நிர்வாகத்தை புதுப் பெரியவா கவனித்து
வந்தார். அந்த சமயம் ஸ்ரீமடத்தின் பொருளாதார
நிலை வரவு செலவை ஈடுகட்ட இயலாத நிலையாக
இருந்தது. புதுப் பெரியவா இந்த விஷயத்தில் முழு
கவனம் செலுத்தினார்கள்.
பங்காரு காமாக்ஷியம்மன் நித்ய பூஜ ட்ரஸ்ட் என்ற
அறக்கட்டளையை துவக்கி அதன் முழு விவரத்தையும்
என்னிடம் கொடுத்து, ஸ்வாமிகளிடம் விண்ணப்பித்து
அவர் சம்மதத்தையும் பெற்று வரும்படி என்னைப்
பணித்தார்கள்.
ஷோலாபூர் அருகில் முகாம்.
அணுக்கத்தொண்டர் நான் வந்திருப்பதை உரத்த
குரலில் தெரியப்படுத்தினார்.
‘முதலில் ப்ரஸாதம் கொடு ‘என்ற சமிக்ஞை!
மூங்கில் தட்டில் வாடிய மாலை ஒன்று,சாதரா, குங்குமம்
இவற்றை வைத்து நின்றேன்.
குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு,மாலையைக்
கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்.
‘இன்நும் என்ன இருக்கு?’
‘அம்பாளின் ப்ரசாதமாக ஓர் சால்வை’..
பெரியவா கண்களில் ஓர் ப்ரகாசம்!
நெஞ்சில் ஏதோ ஓர் நினைவொட்டம்!
‘ஸ்தானிகரைக் கூப்பிடு’..
பாதாதி கேசம் அருட்புனலால் நீராட்டு!
‘நீ..சங்கர சாஸ்திரி பிள்ளைதானே?,,,’
‘ஆமா’..
‘என்ன ஒற்றுமை பாரு…நான் பட்டத்துக்கு வந்தபோது
அவர்தான் சாதரா கொண்டு வந்து பூவாலேயே
அபிஷேகம் பண்ணி..ஹ்ம்…அப்புறம் ப்ரசாதம்
கொடுத்தார். மடத்தின் மூலமா அவருக்கு மரியாதை
பண்ணினோம் தெரியுமா?…’
‘அப்பா சொல்லியிருக்கா…’
‘நீயும் அவரைப் போலவே ப்ரசாதம் கொண்டு
வந்திருக்கே…உனக்கும் பதில் மரியாதை செய்யணும்…
ஆனால் என்னிடம் ஒன்றுமே இல்லை..நான்
அகிஞ்சனன்..(ஒருபைசா கூட வைத்துக் கொள்ளாதவன்)
(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றுமாக விலகி
விட்டபடியால் இப்படிக் கூறினார்கள்.)
பின் ஒரு இடைவெளி.
‘இவனுக்கு ஒரு முத்திரை பவுன் வாங்கிக் கொடுத்தால்
தேவலை..உங்களில் யாராவது செய்ய முடியுமா?…’
அந்தக் கிராமத்தில் நகைக் கடை ஏது?
சில ஸ்த்ரீகள் நகையைக் கழற்றிக் கொடுக்க
முன் வந்தார்கள். ஆனால் பெரியவா முத்திரை
பவுன் அல்லவா கேட்கிறார்கள்?
இந் நிலையில் எனக்கு அழுகை வந்து விட்டது.
பெரியவா தன்னை அகிஞ்சனன் என்று எப்படி
சொல்லலாம்? மனசு பரிதவித்தது.
கண்ணீர் விட்டபடி நமஸ்காரம் செய்தேன்.
‘பெரியவா அனுக்ரஹம் இருந்தால் போதும்..
காமாக்ஷி கருணையில் நாங்கள் சௌக்யமாக
இருக்கிறோம்…’
சொல்லி விட்டு விம்மினேன்.
(நானும் இப்போ விம்மி அழுதபடிதான் இதனை
டைப் செய்கிறேன்)
‘இதே எண்ணத்தோடு கடைசி வரை இரு..
கடைசி வரை க்ஷேமத்தோடு இருப்பாய்..’
சொல்லோடு நின்று விடாமல் முடிகொண்டானில்
ஒரு மிராசுதாரிடம் சொல்லி முத்திரைப் பவுனும்
ஏற்பாடு செய்தார்!
நாங்கள் காமாக்ஷிக்கும் பெரியவாளுக்கும்
எந்த வித பேதமும் பார்ப்பதில்லை!
சொன்னவர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்
ஸ்தானீகர் டி.எஸ். நடராஜ ஸாஸ்திரிகள்.
ஜய ஜய சங்கரா….