கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ரேஸ் குர்ரம். இந்த படம் ஆந்திராவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் தற்போது விஷாலுடன் பூஜை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இணையதளங்கள் மற்றும் ஊடகங்களில் ஸ்ருதிஹாசனின் அதிகபட்ச கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவந்ததே அவரது கோபத்திற்கு காரணம். இந்த புகைப்படங்கள் ரேஸ் குர்ரம் படத்திற்காக எடுக்கப்பட்டது என இணையதளங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளது என்றும் உண்மையில் தான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் எவடு என்ற தெலுங்கு படத்திற்காக தான் நடனப்பயிற்சி செய்யும்போது யாரோ தனக்கு தெரியாமல் மறைந்திருந்து இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்கள் என்றும் கூறியுள்ள ஸ்ருதிஹாசன் இதுகுறித்து தான் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ராம்சரண் தேஜாவுடன் நடிக்கும் எவடு என்ற படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடனப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த படத்தில் சம்மந்தப்பட்ட ஊழியர் ஒருவர்தான் இந்த புகைப்படங்களை எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்ட ஸ்ருதிஹாசன் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இதனால் படக்குழுவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.