என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னத்தை பெற குறுக்கு வழியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான டிடிவி தினகரன் நேற்று ஜாமீன் பெற்று விடுதலையானார். இந்த நிலையில் மீண்டும் கட்சிப்பணிகளை கவனிக்கவுள்ளதாக அவர் அறிவித்திருப்பது அதிமுக அம்மா கட்சியினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இனி சசிகலா குடும்பத்தினர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள போவதில்லை என்றும் கட்சியில் இருந்து தினகரன் நீக்கப்பட்டார் என்றும் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அனைத்து அமைச்சர்களும் கூறிய நிலையில் டிடிவி தினகரன் இவ்வாறு கூறியுள்ளது மேலும் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது.
மீண்டும் கட்சிப்பணி ஆற்றுவது டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘கட்சியின் பொதுச் செயலாளரைத் தவிர வேறு யாருக்கும் என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை. என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை. தமிழகத்தில் மத்திய அரசு மறைமுக ஆட்சி நடத்து வருவதாக கூறப்படுவது முற்றிலும் பொய்.” என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.