தமிழில் வெளியாகிறது மலாலாவின் சுயசரிதை.

i-am-malalaசமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சா அவர்கள் எழுதிய சுயசரிதை I AM MALALA ( ஐ ஆம் மலாலா) என்ற புத்தகம் தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய நான்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்புத்தகத்தை அக்ருதி பதிப்பகம்  வெளியிடுகிறது. இந்த புத்தகம் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் என தெரிகிறது. மற்ற மொழிகளில் வெளிவரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனினும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண் குழந்தைகள் கல்வியுரிமைக்காக மலாலாவின் போராட்டமும், அதற்காக அவர் தலிபான்களால் தாக்கப்பட்டதும், அதிலிருந்து மீண்டெழுந்து தொடர்ந்து போராடுவதும் அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஐ.நா பொது அவையில் மலாலா உரையாற்றிய பின்னர் ‘மலாலா தினம்’ குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலாலாவின் புத்தகம் உலக வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Leave a Reply