சர்வதேச நீதிபதி குழு முன் ஆஜராக தயார். சரத்பொன்சேகா அறிவிப்பால் பரபரப்பு

சர்வதேச நீதிபதி குழு முன் ஆஜராக தயார். சரத்பொன்சேகா அறிவிப்பால் பரபரப்பு
ponsekha
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் நடைபெற்ற இறுதிப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், இதுகுறித்து  சர்வதேச நீதிபதிகள் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத் அல் உசேன் சமீபத்தில் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் இலங்கை அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டு விசாரணையே போதுமானது என்றும், சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் இலங்கை அரசு கூறிவரும் நிலையில், இறுதிப்போரில் இலங்கை ராணுவத்துக்கு தலைமை தாங்கிய ராணுவ தளபதி சரத் பொன்சேகா, போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டால், அதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க தயார் என்று கூறியுள்ளார்.  

ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு பொன்சேகா அளித்த பேட்டி ஒன்றில், சரண் அடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்ய அப்போதைய அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக கூறி இருந்தார். எனவே சர்வதேச நீதிபதி குழு முன் சரத்பொன்சேகா ஆஜரானால், ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயா ஆகியோர்களுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply