பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தயார்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பால் பரபரப்பு

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தயார்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பால் பரபரப்பு

டெல்லிக்கு மாநில அந்தஸ்தை 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் வழங்கி விட்டால் பாஜகவுக்கு பிரசாரம் செய்ய தயார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. ஆனால், தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில ஆண்டுகளாக டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி சட்டசபையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “பாஜகவுக்கு ஒன்று கூறிக்கொள்கிறேன். 2019 தேர்தலுக்கு முன்னதாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கிவிட்டால் டெல்லியில் உள்ள அனைவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என கூறுகின்றேன். நாங்கள் உங்களுக்காக பிரசாரம் செய்கிறோம். ஆனால், நீங்கள் இதனை செய்யவில்லை என்றால், பாஜக டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என மக்கள் கூறுவார்கள்” என கூறினார்.

Leave a Reply