பீப் பாடல் விவகாரத்திற்கு ‘வேதாளம்’ பட பாணியில் பதிலடி கொடுத்த சிம்பு
அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடலுக்கு தமிழகமெங்கும் தீவிரமாக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த பாடலுக்கு தான் இசையமைக்கவில்லை என அனிருத் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஆனால் சிம்புவோ இந்த பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே “யாருடைய கேள்விக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறை சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்திருந்த சிம்பு, தற்போது போலீஸ் சம்மன், வழக்குகள் என ‘பீப்’ பாடல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், இந்த பிரச்சனையை “சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளேன். நான் ஓடி ஒளியற ஆள் இல்லை. எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. அவர் பார்த்துக் கொள்வார். எனக்கு நேர்மையின் மீதும், உண்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.
‘வேதாளம்’ படத்தில் ‘அவன் ஓடி ஒளியற ஆள் இல்லை’ என்று ஒரு வசனம் வரும். அஜித்தின் ரசிகரான சிம்பு, அதே பாணியில் நான் ஓடி ஒளியற ஆள் இல்லை என்று கூறியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: I am ready to face Beep song problems said Simbu