பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்ஸ் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். இதில் அவர் இயக்குனர் ஷங்கர் இதுவரை தன்னுடைய 19 எலும்புகளை உடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
முதல்வன்,அன்னியன்,சிவாஜி மற்றும் எந்திரன் ஆகிய ஷங்கர் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ள பீட்டர் ஹெய்ன்ஸ், எந்திரன் படத்தின் படப்பிடிப்பில் மட்டும் பலமுறை எலும்புமுறிவு ஏற்பட்டு உணவு சாப்பிடக்கூட முடியாமல் இருந்துள்ளார். ஆனாலும் ஷங்கர் தனக்கு தைரியம் அளித்து தான் குணமாகும் வரை படப்பிடிப்பை நிறுத்தி வைத்து, தனக்காக காத்திருந்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாஹுபாலி படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிவதாகவும், இதுவரை ஹீரோவுக்காக மட்டும் டூப் போட்ட பீட்டர், முதல்முறையாக ஹீரோயின் அனுஷ்காவுக்காக டூப் போட்டதாகவும் கூறியுள்ளார். அனுஷ்காவுக்காக பல ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் தான் நடித்துள்ளதாகவும், இந்த சண்டைக்காட்சிகளில் அனுஷ்கா உண்மையிலேயே நடித்திருந்தால் அவரது வாழ்வில் பல விபரீதங்கள் நடந்திருக்கும் என்றார். இதனால் அனுஷ்காவுக்கு வாழ்வு தான் வாழ்வு கொடுத்துள்ளதாகவும் கூறிய பீட்டர் ஹெய்ன்ஸ், இன்னும் அனுஷ்கா போன்ற திறமையான நடிகைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.