ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாஉள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டதை அறிந்த பாஜகவின் முக்கிய தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு இதே வழக்கில் சிறைத் தண்டனையும் அபராதமும் பெற முக்கிய காரணமாக இருந்தவர் இந்த வழக்கின் முதல் மனுதாரர் சுப்ரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளதாக டுவிட்டரில் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்ட ஆச்சார்யா, கர்நாடக அரசு இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அதிமுக வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளிவருகின்றன.