தேர்தலுக்கு முன்னர் நான் அளித்திருந்த ஒரு பேட்டியில் திமுக 5 இடங்கள் வரை வெற்றி பெறும் என்று கூறியதற்காக மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என மு.க.அழகிரி இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திமுக தற்போது கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்ததால்தான் இந்த தோல்வியை திமுக சந்தித்துள்ளது என்றும் கூறிய அழகிரி, திமுகவில் உள்ள சர்வாதிகார போக்கும், உட்கட்சி பிரச்சனையுமே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தோல்விக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. யார் பொறுபேற்பார்கள் என்று தெரியவில்லை என்று கூறிய மு.க.அழகிரி மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராசாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியது திமுக செய்த மாபெரும் தவறு என்று தெரிவித்தார்
மேலும் அவர் தனது பேட்டியில் “திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. திமுக கட்சி அழுக்காக உள்ளது. அழுக்காக இருக்கும் துணியை அழுக்கு நீங்க வெளுப்பது போல் திமுகவில் அடைந்துள்ள அழுக்கையும் நீக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே கட்சி மேலும் வளரும் இல்லாவிட்டால் 2016 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை தான் நீடிக்கும்.